ஆரோக்கியமான கேரட் லட்டு செய்வது எப்படி?

எத்தனையோ வகையான லட்டு சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் ஆரோக்கியமான இந்த லட்டுவை சாப்பிட்டு இருக்கமாட்டீர்கள். லட்டில் ஆரோக்கியமா? ஆமா இது கேரட் லட்டு இல்லையா?

கேரட் லட்டு:

கேரட்                -               ஒரு கிலோ

ரவை                -               அரை கிலோ

கடலை மாவு         -               20 கிராம்

பால்கோவா                -               அரை கிலோ

சர்க்கரை             -               ஒரு கிலோ

கிச்ஸ்மிச்ஸ்          -               5 கிராம்

பிஸ்தா பருப்பு        -               5 கிராம்

ஏலக்காய்             -               5 கிராம்

நெய்                 -               போதுமானது

 

செய்முறை:

ரவையை கடலை மாவுடன் கலந்து சிறிது நெய்விட்டுப் பிசைந்து பிறகு வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்துப் பிசைந்து தனியே வைத்துவிட வேண்டும்.  கேரட்டை தேங்காய் துருவியில் துருவி வாணலியில் சிறிது நெய்விட்டு துருவலை அதில் கொட்டி வதக்கிக் கொள்ள வேண்டும்.

ரவையையும், கடலை மாவையும் கலந்து சல்லடையில் சலித்துக் கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் சிறிது நெய்விட்டு அதையும் பொன்நிறமாகும்வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேங்காய் துருவலை மறுபடியும் வாணலியில் கொட்டி நெய்விட்டு வதக்கிக் கொண்டே அதோடு சிறிது சிறிதாக பால்கோவாவைச் சேர்க்க வேண்டும்.

சர்க்கரையையும், தண்ணீர் சேர்த்து ஒற்றை இழைப் பாகாகக் காய்ச்சி அதில் ரவை, பால்கோவா உள்ளிட்ட எல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்க வேண்டும். பருப்புகளையும் சேர்க்க வேண்டும்.ஆறியதும் லட்டுகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

More News >>