ஐ.ஏ.எஸ் / ஐ.பி.எஸ் தேர்வு எழுத விரும்புகிறீர்களா? தேர்வு அட்டவணை வெளியீடு

மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் (UPSC), இந்திய ஆட்சி பணி, இந்திய வெனிநாட்டு பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட பல மத்திய அரசு பணிகளுக்கு தகுதியானோரை தேர்வு செய்யும் குடிமை பணி தேர்வினை (Civil Services Examination) நடத்துகிறது.

இந்தத் தேர்வு முதனிலை தேர்வு, முதன்மை தேர்வு, ஆளுமை தேர்வு என்று மூன்று கட்டங்களாக நடத்தப்படும்.

முதனிலை தேர்வு, கொள்குறி வகை (Objective Type) கேள்விகளை கொண்டிருக்கும்.முதன்மை தேர்வு, விரிவாக விடையளிக்கும் வகையில் அமைந்திருக்கும்.ஆளுமை தேர்வு என்பது நேர்முகத் தேர்வாகும்.2019ம் ஆண்டு குடிமை பணி தேர்வுக்கான அட்டவணையை மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

குடிமை பணி தேர்வுக்கான அலுவல்ரீதியான அறிவிப்பு: 2019 பிப்ரவரி 19முதனிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 2019 மார்ச் 18முதனிலை தேர்வு நடைபெறும் நாள்: 2018 ஜூன் 2முதன்மை தேர்வுகள் தொடங்கும் நாள்: 2019 செப்டம்பர் 20மேலும் விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

ஆயத்தமாகுங்க; சிறப்பா எழுதுங்க; நேர்மையான அதிகாரியாக கலக்குங்க!

More News >>