குற்றப்பின்னணி நபர்கள் போட்டியிட தடை இல்லை- உச்சநீதிமன்றம்
குற்றப்பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
டெல்லி பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் அஷ்வினி குமார் உபாத்யாயா, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் ஜே.எம்.லிங்டோ, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகியோர் தனித்தனியாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
அதில்,"தற்போதைய நிலையில், 33 சதவீத எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் குற்ற வழக்குகளை சந்தித்து வருவதாக தேர்தல் கமிஷனின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அரசியல், கிரிமினல் மயமாகி வருவது, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. எனவே, கடுமையான குற்ற வழக்குகளை சந்திப்பவர்கள், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட வேண்டும்.நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டாலே, அத்தகைய நபர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட வேண்டும்." வேண்டும் என அதில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றப்பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.