அட! இதுக்காகதான் திருப்பதி போனாரம் முதல்வர் பழனிசாமி.

இன்று காலை திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த முதலமைச்சர் உலக நன்மைக்காகவும், மக்கள் நலமுடன் வாழவும் திருப்பதியில் வழிபாடு நடத்தியதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் வழிபாடு நடத்தி வருகிறார். நேற்று அவர் வராஹ சுவாமி மற்றும் ஹயகிரீவர் சுவாமி சன்னதிகளுக்கு சென்று வழிபட்டார்.

நேற்று திருப்பதி வந்தடைந்த முதல்வர் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்தார். இது மரியானதை நிம்மித்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திருமலையில் தங்கிய அவர், சுவாமி ஏழுமலையானுக்கு வழக்கமாக நடைபெறும் வாராந்திர அஷ்டதள பாத பத்ம சேவையில் இன்று காலை குடும்பத்தினருடன் பங்கேற்றார்.

பிறகு அங்குள்ள அனுமான் கோயில் வழிபட்ட அவர், கோயிலுக்கு எதிரே உள்ள அகிலாண்டத்தில் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டார். அவருடன் குடும்பத்தினரும் கோயிலில் வலம் வந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, உலக நன்மைக்காகவும் மக்கள் நலமுடன் வாழவும் திருமலையில் வழிபாடு நடத்தியதாக தெரிவித்தார்.

More News >>