தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்யும் சூழல் நிலவி வருகிறது. ஆங்காங்கே தூரல் மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், தெற்கு உள் கர்நாடகா பகுதியில் இருந்து தமிழகத்தின் மன்னார் வளைகுடா வரையில் மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், அடுத்த 3 நாட்களுக்கு பல இடங்களில் மழையும், தொடர்ந்து 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழையும் பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னையின் வானம் மேகமூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் மட்டும் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More News >>