4வது நாளாக தொடரும் யமஹா போராட்டம்?
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் யமஹா மோட்டார் சைக்கிள் தொழிற்சாலையில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி தொழிலாளர்கள் 4வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரகடம் அடுத்த வல்லம் பகுதியில் செயல்பட்டு வரும் யமஹா மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 350க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆலையில் தொழிற்சங்கம் ஆரம்பிக்க தொழிற்சாலை நிர்வாகம் அனுமதி மறுக்கவே இருங்காட்டுக் கோட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் இணை ஆணையர் நான்கு நாள்களாக அழைத்தும் பேச்சுவார்த்தைக்கு தொழிற்சாலை நிர்வாகத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை, மேலும் தொழிலாளர் நிர்வாகிகளையும் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் தொழிற்சாலை நிர்வாகத்தின் அச்சுறுத்தலையும் மீறி கலந்து கொள்ள சென்ற 2 தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனை கண்டித்தும் அவர்களை மீண்டும் பணியமர்த்த கோரியும் அங்கு பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் தொடர்ந்து 4வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் சங்கம் ஆரம்பித்ததற்காக 2 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்த விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு வராத இருக்கும் நிலையில் உள்ள தொழிற்சாலைக்கு தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தமிழ அரசு நடவடிக்கை எடுத்தால் தொழிலார்களுக்கு நன்மை ஏற்படலாம்