ரபேல் ஊழலில் பிரதமர் மோடியும் 40 சகாக்களும்- காங்கிரஸ்
பிரதமர் மோடியும், 40 சகாக்களும் ரபேல் ஊழல் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ரபேல் ஒப்பந்தத்தை சீர்குலைக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சர்வதேச சதியில் ஈடுபட்டிருப்பதாக மத்திய அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு பதிலளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, "ரபேல் கொள்முதல் ஊழல் குறித்து கேள்வி எழுப்பினால், காங்கிரஸ் மீது பாஜக சேற்றை வாரி இறைக்கிறது"
"எங்களது ஆட்சியின் போது, அரசு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ரபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்த பிரதமர் மோடி, அம்பானி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளார். இது குறித்து நாங்கள் விளக்கம் கோரினால், மத்திய அமைச்சர்களும், பாஜகவினரும் தவறான வார்த்தைகள் பேசி வசைப்பாடுவதோடு, சேற்றை வாரி இறைக்கின்றனர்"
"இந்த நாடு அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற கதையை கேட்டிருக்கிறது, இப்போது மோடியும், 40 சகாக்களும் ரபேல் ஊழலுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கேட்கிறது. பிரதமர் மோடி நாட்டுக்குப் பிரதமரா? அல்லது அம்பானிக்கு பிரதமரா?'' என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.