மேற்குவங்கத்தில் பாஜக பந்த்!
இஸ்லாம்பூர் துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்வத்தைக் கண்டித்து, மேற்குவங்கத்தில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்க மாநிலம் தினாஜ்பூர் மாவட்டம் இஸ்லாம்பூரில் உள்ள தாரிவித் உயர்நிலை பள்ளியில் வரலாறு மற்றும் கணிதம்ஆசிரியர்கள் இடம் காலியாக இருக்கும் போது உருதுக்கு மட்டும் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதை கண்டித்து மாணவ அமைப்பினர் போராட்டம் மேற்கொண்டனர்.
மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏபிவிபி அமைப்பின் தலைவர் ராஜேஸ் சர்க்கார் உள்பட 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனை கண்டித்து சிலிகுரியில் நடந்த போராட்டத்தில் போலீஸ்காரர் ஒருவர் மீது இடதுசாரிக் கட்சி தொண்டர்கள் மண்ணெண்ணெய் ஊற்றியதால் பரபரப்பு உருவானது.
இதனிடையே, இந்த சம்பவத்தைக் கண்டித்து பாஜக முழு அடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. கொல்கத்தா, கூச்பிகார் உள்ளிட்ட இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பொதுமக்கள் பேருந்துஇன்றி தவித்தனர். கூச்பிகார் பகுதியில் அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
அனைத்து துறை சார்ந்த ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வர மேற்குவங்க அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.