ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து விசாரிக்க அவகாசம் தேவை- ராஜேஷ்வரன்

ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து விசாரிக்க கூடுதல் அவகாசம் தேவை என அந்த ஆணையத்தின் தலைவர் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்தது. அந்த ஆணையத்தின் தலைவராக ராஜேஸ்வரன் என்ற ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரையில் கலவரம் தொடர்பாக நடந்த சம்பவங்கள் குறித்து பலரிடம் விசாரணை நடத்தி வருகிறார். ஏற்கனவே ஒன்பது கட்ட விசாரணை முடிந்த நிலையில், இன்று 10-வது கட்ட விசாரணையை விசாரணை ஆணையத்தின் தலைவர் ராஜேஸ்வரன் தொடங்கியுள்ளார்.

மதுரையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் 3 நாட்கள் நடைபெற உள்ள விசாரணையில், 28 பேர் ஆஜராக உள்ளனர். மேலும், கலவரம் தொடர்பாக சுமார் 600-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த விசாரணையை 2 மாதத்துக்குள் முடிக்க முடியாது. எனவே கூடுதல் அவகாசம் நீதிமன்றத்தில் கேட்க இருக்கிறோம். வரும் நவம்பர் மாதம் வரை அனுமதி இருப்பதால், அதன் பிறகு கூடுதல் அவகாசம் கேட்க முடிவு செய்துள்ளோம்"

More News >>