ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் ஆளுநரிடம் மனு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது பற்றி உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை காத்திருக்க போவதாக ஆளுநர் கூறியதாக ராஜீவ் காந்தி கொலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது உடன் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை  சென்னையில் இன்று சந்தித்து மனு அளித்தனர்.7 பேர் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் இருப்பதால், அவர்களை விடுவிக்கக் கூடாது என்று பாதிக்கப்பட்டவர்கள் ஆளுநரிடம் முறையிட்டதாக தெரிவித்தனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை தமிழக அரசின் பரிந்துரை குறித்து முடிவு எடுக்கப் போவதில்லை என்று ஆளுநர் உறுதியளித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் பின்னர் கூறினர்.

பாதிக்கப்பட்டவர்கள் மனுவில் கூறியதாவது       குற்றவாளிகளை விடுதலை செய்யக் கூடாது என்றும், அவர்கள் இறக்கும் வரை சிறையில் தான் இருக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத்தில் அனைவரும் சேர்ந்து வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள்.இவர்களை விடுதலை செய்யக் கூடாது என்று அனைவரும் சேர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களிடம் கேட்டனர். அதன் பின்னர் ஆளுநர் கூறியதாவது, உங்கள் மனுவை நாங்கள் பரிசளிப்போம். அதுவரை காத்திருங்கள் என்று கூறினார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்குப் எதிராக மத்திய அரசு முறையீட்டு வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று கடந்த 6 தேதி உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழுப்பேரையும் சட்டப் பிரிவு 161ன் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு எதிராக சிலர் களமிறங்கியுள்ளனர்.

More News >>