வைரலாகும் ஆண்ட்ரியாவின் ஹானஸ்ட்லி ஆங்கில ஆல்பம் !

தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா, முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார். மேலும், ‘ஹானஸ்ட்லி’ என்று பெயரிடப்பட்ட இந்த ஆல்பத்தில் பாடியும் நடித்தும் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.

 

ரம்மியமான சூழலில் உருவாகியுள்ள இந்த ரொமாண்டிக் பாடலுக்கு லியான் ஜேம்ஸ் என்பவர் இசையமைத்துள்ளார். கெபா ஜெரிமியாவின் தனித்துவமான கிட்டார் இசை, பாடலை கேட்பவர்களை கவர்ந்திழுக்கும் மேஜிக் செய்கிறது.

அடுத்த மாதம் வெளியாகும் தனுஷின் வடசென்னை படத்தில், ஆண்ட்ரியா, அமீருக்கு ஜோடியாக வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், தனது சொந்த தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹானஸ்ட்லி’ பாடலை ஆண்ட்ரியா ஜெரிமியா என்ற அவரது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு பாராட்டுக்களை பெற்று வருகிறார்.

ஆண்ட்ரியாவின் ‘ஹானஸ்ட்லி’ காதலில் நீங்களும் மிதந்து செல்லுங்கள்..

More News >>