நீட் விலக்கு பெற முடியாத திராணியற்ற முதலமைச்சர்- திமுக விமர்சனம்

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு பெற முடியாத திராணியற்ற முதலமைச்சர் பழனிசாமி தி.மு.கவை விமர்சிப்பதா என அக்கட்சியின் எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன்  வசைபாடியுள்ளார்.   தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் தி.மு.கவை கடுமையாக விமர்சித்து பேசினர். இதற்கு அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன்,  நாங்கள் நிறம் மாறமாட்டோம். அதிமுக தலைமையில் இருப்பவர்கள் தான் நிறம் மாறி கொண்டே இருக்கிறார்கள். பன்னீர்செல்வம் நிறம் மாறி மீண்டும் கட்சியில் சேர்ந்திருக்கிறார்" என்றார்    "எதிர்கட்சிக்கு எதிராக அதிமுக கண்டன பொது கூட்டம் நடத்தியிருப்பதே, திமுக தலைமையின் வலிமையை காட்டுகிறது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இடையே பல முரண்பாடுகள் இருக்கிறது."    "டிடிவி தினகரனை தூண்டிவிட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அவர்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் மதிப்பதில்லை. அடிப்படை அறிவு இல்லாத, தமிழ் உணர்வு இல்லாத முதலமைச்சர், தப்பு தப்பாக பேசும் அமைச்சர்களாக இருப்பதால், தேர்தல் வந்தவுடன் மக்கள் இவர்களை தூக்கி எறிவார்கள்" என டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.   "தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு தொடர்பான  இரண்டு மசோதாக்களுக்கு, மத்திய அரசிடம் அனுமதி பெற முடியாத திராணியற்ற முதமைச்சர். மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கும் இவர்கள் தி.மு.க வை விமர்சிப்பதா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
More News >>