ஒரே நாளில் 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் விடுமுறை

சென்னையில் நடந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் விடுமுறை எடுத்துள்ளனர்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு மாநாடு சென்னையில் நடந்தது. இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, டிடிவி தினகரன் அணியை சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

இதில் பங்கேற்க, மாநிலம் முழுவதிலும் இருந்து அரசு ஆரம்பப் பள்ளிகளில் பணிபுரியும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் விடுமுறை எடுத்து பங்கேற்று உள்ளனர்.ஒரே நாளில் இத்தனை ஆயிரம் ஆசிரியர்கள் விடுமுறை எடுத்து மாநாட்டில் பங்கேற்று இருப்பதை அறிந்து தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .

ஆசிரியர்களின் விடுமுறை காரணமாக, மாணவர்களுடைய கல்வி பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இன்று விடுமுறை எடுத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

More News >>