நீதிமன்றங்களில் வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு- உச்சநீதிமன்றம்

நீதிமன்றங்களில் முக்கிய வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்பு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தொலைகாட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்கும்படி மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் உள்ளிட்ட பலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.

இறுதிகட்ட விசாரணை முடிந்த நிலையில், இன்று இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. "தேசிய மற்றும் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணையை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம். அதை தெரிந்து கொள்வதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது"

"இதற்காக, பொதுமக்களின் உரிமை, வழக்கு தொடர்ந்தோரின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில் தேவையான விதிமுறைகள் வகுக்கப்படும். நீதித்துறையின் பொறுப்பை அதிகரிக்க வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்பு செய்வது உதவியாக இருக்கும். வழக்கு விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வது முதலில் உச்சநீதிமன்றத்தில் இருந்து தொடங்கும்" என அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>