திமுக தலைவர் ஸ்டாலின் அப்போலோவில் அனுமதி?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறுநீரகத் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையின் 4வது தளத்தில் உள்ள சிறப்பு சிகிச்சைப் பிரிவில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்ட மு.க. ஸ்டாலினுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து வழக்கமான நடைமுறைகளுக்குப் பின் இன்று அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் திமுக தலைவர் கலைஞர் மறைவிற்கு பிறகு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க. ஸ்டாலின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுயிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது சாதாரண மருத்துவ பரிசோதனை என்றும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் என்று கட்சி சாா்பில் தொிவிக்கப்பட்டு இருந்தது.
இதனிடையே சிறுநீரக தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் இன்று காலை வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், தி.மு.க. தலைவா் ஸ்டாலினுக்கு வலது தொடைப் பகுதியில் இருந்த நீா்க்கட்டியை அகற்ற சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவா் இன்று பிற்பகலுக்குள் வீட்டிற்கு அனுப்பப்படுவாா் என்று குறிப்பிடப்பட்டுளார்கள். அவர் நலமுடன் வரவேண்டும் என்று தொண்டர்கள் வாழ்த்துகிறார்கள்.