அறுவை சிகிச்சைக்கு பின் அப்போலோவில் இருந்து வீடு திரும்பிய மு.க.ஸ்டாலின்
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் தொடை பகுதியில் ஏற்பட்டிருந்த நீா்க்கட்டி அகற்றப்பட்டதைத் தொடா்ந்து நலமுடன் வீடு திரும்பினாா்.
தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் புதன் கிழமை இரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
அப்போலோ மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் இன்று காலை வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், தி.மு.க. தலைவா் ஸ்டாலினுக்கு வலது தொடைப் பகுதியில் இருந்த நீா்க்கட்டியை அகற்ற சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவா் இன்று பிற்பகலுக்குள் வீட்டிற்கு அனுப்பப்படுவாா் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாா். மருததுவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்டாலினை ம.தி.மு.க. பொதுச்செயலாளா் வைகோ நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். மேலும் ஸ்டாலின் இரண்டு அல்லது மூன்று தினங்கள் பெரிய அளவில் விழாக்களில் கலந்து கொள்ள மாட்டாா் என்று தி.மு.க. தரப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.