தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் தமிழ் டிரெய்லரை வெளியிட்ட கமல்!

ஆமீர்கான் மற்றும் அமிதாப்பச்சன் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான். இந்த படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

யஷ்ராஜ் சோப்ரா, தயாரிப்பில், விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கத்தில் பீரியட் ஃபிலிமாக தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் உருவாகியுள்ளது. ஆமீர்கான், அமிதாப் பச்சன், கேத்ரீனா கைஃப் மற்றும் சனா என மிகப் பெரிய ஸ்டார் காஸ்ட் இப்படத்தில் இணைந்துள்ளனர். வரும் நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட்டமாக இப்படம் ரிலீசாகிறது.

டிரெய்லர் எப்படி இருக்கிறது?

மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் டிரெய்லரை காண்போருக்கு, ஜானி டெப்பின் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படம் தான் நினைவுக்கு வருகிறது. இந்தியாவிற்கு வாணிபம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி, பின்னர் நாட்டை அடிமைபடுத்தும் 1795ஆம் காலகட்டத்தில் படம் ஆரம்பிக்கின்றது. இந்த அடிமை தனத்தை எதிர்த்து, போராளிகளின் தலைவனான அமிதாப் பச்சன் ஆங்கிலேய படையினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்.

அவரை அட்டாக் செய்ய, அவரை போன்ற ஒரு நபரை தேடுகின்றனர். பிரங்கி மல்லா என்ற கதாபாத்தில் ஆமீர்கான் என்ட்ரி கொடுக்கிறார். சகுனியை போன்ற குணாதிசயம் கொண்டவராக ஆமீர்கான் நடித்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளில் வெகு நாட்களுக்கு பிறகு அமிதாப் பச்சன் பாலிவுட்டின் பிதமகராக மீண்டும் பட்டையை கிளப்புகிறார். அவரது மகளாக வரும் பாத்திமா சனா கான், 4 அம்புகளை ஒரு வில்லில் எய்து எதிரிகளை வீழ்த்துகிறார் (பாகுபலியில் 3 தானே?) இறுதியில், அமிதாப்பிற்கும், ஆமீர்கானுக்கு கத்தி சண்டை நடக்கிறது.

ஒரு காட்சியில் ஆமீர்கான் ’எச்சகல டேஷ்ஷை(நாங்கள் பீப் போட்டுவிட்டோம்) இங்கிலிஷ்ல எப்படி சொல்வாங்க’ என்று கேட்க அவர் அதற்கான ஆங்கில அர்த்தத்தை சொல்கிறார். டிரெய்லரில் எந்தவித மியூட்டும் இல்லை. ஒருவேளை சென்சாரில் கட் செய்யப்படலாம். கத்ரீனா கைஃப் வரும் காட்சிகள் எல்லாம் செம ஹாட்!

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியனின் காப்பியா?

டிரெய்லரை பார்த்த அனைவருக்கும் ஜேக்ஸ் பேரோவின் கதாபாத்திரத்தை தழுவியே ஆமீர்கானின் பாத்திரப் படைப்பு இருப்பதும், இந்தியாவின் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படம் போன்றே படமிருப்பதும் தெளிவாக தெரிகிறது. இப்படி எளிதில் கம்பேரிசன் செய்து விடுவர் என்பதை படக்குழு ஏன் யோசிக்கவில்லை என்பது புரியவில்லை? ஒருவேளை இதைத்தான் எதிர்பார்த்து எடுத்துள்ளனரோ என்பது படம் ரிலீசுக்கு பின்னர் தெரியும். டிரெய்லர் விறுவிறுப்பாக சென்றாலும், பிரம்மாண்ட காட்சிகளில் வரும் சிஜி போர்ஷன் பாகுபலி, எந்திரன் படங்களுக்கு நிகராக இல்லை என்பது படத்திற்கு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தும் என தெரிகிறது. சர்க்காருக்கு போட்டியாக தமிழிலும் களமிறங்கியுள்ளார் ஆமீர்கான் என்பது அஜித் ரசிகர்களின் ஆறுதல்!

More News >>