புதிய தலைமைச் செயலக கட்டிடம் முறைகேடு குறித்து விசாரணை
புதிய தலைமைச் செயலகக் கட்டட முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை இனி விசாரணை நடத்தும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.
புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க கடந்த 2011ம் ஆண்டு நீதிபதி ரகுபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இதற்கு எதிராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, ஸ்டாலின், துரைமுருகன் ஆகிய மூவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்தவழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ரகுபதி ஆணையத்தின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிபதி ரகுபதி ஆணையத்தின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். இதன் பிறகு புதிய நீதிபதியை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளதா? என்பது குறித்து பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயன் இந்த புகார்கள் தொடர்பாக ஆவணங்கள் அனைத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்ப்பட்டுள்ளதாகவும், புதிய நீதிபதியை நியமித்து விசாரணை ஆணையத்தை புதுப்பிக்கும் திட்டம் இல்லை என்றும் தெரிவித்தார்.
இதில்அடுத்தகட்ட விசாரணையை மேற்கொண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான உத்தரவை நாளை பிறப்பிடமாக தெரிவித்த நீதிபதி உயர் நீதிமன்றம் ஆணையத்திற்கு எதிரானது அல்ல என்றும், நியாயமான பிரச்சினைகளுக்கு ஆணையம் அமைக்கலாம் என்றும் விளக்கமளித்தார்.