ஜிஎஸ்டி வரியால் ஹோட்டலில் உணவு விலை எகிறியது கார் விலை சரிந்தது

ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை என்பதை நடைமுறைப்படுத்துவதற்காக ஏற்கனவே இருக்கும் உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு மறைமுக வரிகள் நீக்கப்பட்டு.. அதற்கு பதிலாக சரக்கு, சேவை வரி என்ற ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் ஹோட்லில் உணவுப்பொருட்கள் விலை தாறுமாறாக எகியுள்ளது.

தற்போது ஒருவர் ரூ.100க்கு சாப்பிட்டால், சரக்கு சேவை வரியும் சேர்த்து ரூ.118 செலுத்த வேண்டும்.. சென்னையில் பெரிய ஹோட்ல்களில் 2 இட்லி ரூ.45-ல் இருந்து ரூ.55 ஆக உயர்ந்துள்ளது. தோசை ரூ.60-ல் இருந்து ரூ.65-க்கும், பூரி ரூ.70-ல் இருந்து ரூ.75-க்கும், பொங்கல் ரூ.70-ல் இருந்து ரூ.75-க்கும் விலை உயர்ந்துள்ளது. வடை ரரூ.35-ல் இருந்து ரூ.45-க்கும், சாப்பாடு ரூ.125-ல் இருந்து ரூ.140-க்கும், காபி ரூ.33-ல் இருந்து ரூ.35-க்கும், டீ ரூ.32-ல் இருந்து ரூ.35- என உயர்ந்துள்ளன.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் கார்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு கார்களின் விலைகள் சரிவை சந்தித்துள்ளன. மாருதி சுசுகி இந்தியா நிறுவனம், தனது பல்வேறு மாடல் கார்களின் விலையை 3 சதவீத அளவுக்கு குறைத்துள்ளது. ஆல்டோ கார் விலை ரூ.2,300-ல் இருந்து ரூ.5,400 வரையும், வேகன் ஆர் ரூ.5,300-ல் இருந்து ரூ.8.300 வரையும், ஸ்விப்ட் ரூ.6,700-ல் இருந்து ரூ.10,700 வரையும் குறைந்துள்ளது. பாலினோ கார் விலை ரூ.6,600-ல் இருந்து ரூ.13,100 வரையும், டிசையர் கார் ரூ.8,100-ல் இருந்து, ரூ.15,100 வரையும் எர்டிகா கார் ரூ.21,800 வரையிலும், சியாஸ் ரூ.23,400 வரையும் விதாரா பிரஸ்ஸா எஸ்.யு.வி. விலை ரூ.10,400 முதல் ரூ.14,700 வரையும், எஸ் கிராஸ் ரூ.17,700 முதல் 21,300 வரையும் விலை சரிந்துள்ளன.

டயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனமும் கார் விலைகைளை குறைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் புதிய பார்ஜூனா கார் விலை ரூ.2.17 லட்சம் வரையிலும், இனோவா கிரைஸ்டா ரூ.98,500 வரையிலும், கரோல்லா ஆல்டிஸ் ரூ.92,500 வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது. பிளாட்டினம் எத்தியோஸ் கார் ரூ.24,500 வரையும், எதியோஸ் லிவா ரூ.10,500 வரையிலும் குறைந்துள்ளது.

சொகுசு காருக்கு பெயர் பெற்ற பி.எம்.டபிள்யு. கார் நிறுவனம், தனது மாடல் கார்களுக்கு ரூ.70 ஆயிரம் தொடங்கி, ரூ.1.80 லட்சம் வரையிலும் விலை குறைப்பு செய்துள்ளது. ஜாக்குவார் லேண்ட் ரோவர் கார் விலை சராசரியாக 7 சதவீதம் வரை விலையை குறைத்துள்ளது.

More News >>