முருங்கைக்கீரை சூப் செய்வது எப்படி.?
தேவையான பொருட்கள்
முருங்கைக் கீரை 2 கிண்ணம்
சின்ன வெங்காயம் 10
பூண்டு பல் 4 பெரியது
தக்காளி 2
ஜீரகம் 1/2 தேக்கரண்டி
மிளகு 1/2 தேக்கரண்டி
உப்பு சுவைக்கேற்ப
தண்ணீர் 5 கிண்ணம்
செய்முறை
மேலே சொன்ன பொருட்கள் எல்லாவற்றையும் ஒன்றாக குக்கரில் போட்டு மூடி வேக வைத்து எடுக்கவும். அதன் பின் எடுத்து வடிகட்டி லேசான சூடுடன் குடிக்க அதுவும் மழை சமயம் தொண்டைக்கு இதமாக இருக்கும்.
சுவையான முருங்கை சூப் தயார்.