ஜெ. மரணம் குறித்து தினகரனுக்கு சம்மன் ஆதாரங்களை அளிக்க உத்தரவு
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தினகரனுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பியிருந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோ ஒன்றை தகுநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் வெளியிட்டார்.
தற்போது டிடிவி தினகரன், இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது
மேலும், சம்மன் அனுப்பட்ட 3 பேரும், 7 நாட்களுக்குள் தங்களிடம் உள்ள ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.