என்னது நியூ வோர்ல்ட் படத்தின் காப்பியா சிசிவி? மணிரத்னத்தை கிழித்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை மாறன்!

மணிரத்னம் இயக்கத்தில் நேற்று வெளியான ‘செக்கச் சிவந்த வானம்’ படம் 2013ஆம் ஆண்டு கொரிய மொழியில் வெளியான ‘நியூ வோர்ல்ட்’ படத்தின் காப்பி என ’ப்ளூ சட்டை’ மாறன் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார். இதனால், ‘நியூ வோர்ல்ட்’ டிரெய்லர் மற்றும் படத்தை தேடி தமிழ் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

அரவிந்த்சாமி, அருண் விஜய், விஜய்சேதுபதி, சிம்பு, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா, பிரகாஷ் ராஜ் என நட்சத்திர பட்டாளத்தை ஒன்றினைத்த மணிரத்னம், தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு எழ கொரியன் ஆக்‌ஷன் படத்தை கையில் எடுத்துள்ளதாக மாறனின் விமர்சனத்தின் மூலம் தெரியவருகிறது.

செக்கச் சிவந்த வானம் படம் நல்ல விமர்சனங்களையும், நல்ல வரவேற்பையும் பெற்று வரும் நிலையில், படத்தை டோட்டல் டேமேஜ் செய்வது போல, உள்ளது இந்த விமர்சனம். ’மணிரத்னம் சார்’ என்ற இமேஜ் இதனால் டோட்டல் டேமேஜ் ஆகியுள்ளது.

மேலும், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசையும் நியூ வோர்ல்ட் கொரிய படத்தின் பின்னணி இசையை காப்பியடித்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

நியூ வோர்ல்ட் படத்தின் டிரெய்லரை பார்த்து வரும் தமிழ் ரசிகர்கள், அந்த டிரெய்லரின் கீழேயும் கமெண்டுகளில் தெறிக்க விட்டு வருகின்றனர்.

மணிரத்னம் கொரிய படத்தின் இன்ஸ்பிரேஷனை கொண்டு எடுத்தாரா, அல்லது கிரெடிட்ஸ் கொடுக்க மறந்தாரா என்பது அவருக்கே வெளிச்சம்..

மற்ற விமர்சகர்கள் போற்றி துதி பாடிய நிலையில், மாறன் படத்தின் பின்னணி அறிந்து, விமர்சித்து பாராட்டை பெற்றுள்ளார்.

என்னதா இருந்தாலும், அந்த நக்கல் கழுதை கமெண்ட் ஓவர் குசும்பு!

More News >>