பாவி தினகரனுக்கு ஏன் ஆதரவளித்தேன் - சுப்பிரமணியன் சாமி விளக்கம்
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஏன் டிடிவி தினகரனுக்கு ஆதரவளித்தேன் என்று பாஜக மூத்தத்தலைவர் சுப்பிரமணியன் சாமி விளக்கம் அளித்துள்ளார்.
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தமிழர்கள் தினகரனுக்குத்தான் வாக்களிக்க வேண்டும்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் சுப்பிரமணியன் சாமி பதிவிட்டு இருந்தார். மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போதே `தினகரன் வெற்றி பெறுவார்’ என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சாமி, “பலரும் என்னை ஏன் மற்றவர்களை விட ‘பாவம் செய்த’ தினகரனுக்கு ஆதரவளித்தீர்கள் என்று கேட்கிறார்கள். நான் சொன்னேன்: இராமாயணத்தில் ராமன் ஏன் வாலிக்கு ஆதரவளிக்காமல் சுக்ரிவனுக்கு ஆதரவளித்தார் என்று படியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.