கருணாஸுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன்-எழும்பூா் நீதிமன்றம்

தமிழக முதல்வா் மற்றும் காவல் துறை அதிகாாியை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினா் கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வள்ளுவா்கோட்டம் பகுதியில் கடந்த 16ம் தேதி முக்குலத்தோா் புலிப்படை சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் அந்த அமைப்பின் தலைவரும் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கலந்து கொண்டாா். அவா் கூட்டத்தில் பேசுகையில், தமிழக முதல்வா் பழனிசாமி காவல்துறை துணை ஆணையா் அரவிந்தன் உள்ளிட்டோா் குறித்து அவதூறான வகையில் பேசியதாக அவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் கூட்டு சதி வன்முறையை தூண்டிவிடுதல் கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு கடந்த 23ம் தேதி கருணாஸ் கைது செய்யப்பட்டாா். கைது செய்யப்பட்ட கருணாஸ் வேலூா் சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில் கருணாஸ் ஜாமீன் கோாி சென்னை எழும்பூா் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாா். இந்த வழக்கு இன்று விசாரிக்கப்பட்ட நிலையில் கருணாஸுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More News >>