பாகற்காயை ருசித்து சாப்பிடும் வகையில் செய்வது எப்படி

பாகற்காய் உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும் பசியைத் தூண்டும் பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. ஆனால் அதன் கசப்பு தன்மை காரணத்தால் அதிகமக விரும்பி சப்பிட மாட்டர்கள். அனைவரும் பாகற்காயை ருசித்து சாப்பிடும் வகையில் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

பெரிய பாகற்காய் - 3 மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி உப்பு - தேவைக்கு அரிசி மாவு அல்லது கார்ன்ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - பொரிக்க தேவையானது

செய்முறை

முதலில் பாகற்காயை மெல்லிய வட்டமாக நறுக்கி அதில் மிளகாய்தூள், மஞ்சள் தூள், உப்பு, அரிசி மாவு சேர்க்கவும். லேசாக தண்ணீர் தெளித்து பிசைந்து அரை மணி நேரம் வைக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் போட்டு பொரித்து எடுக்கவும்.பாகற்காய் சிப்ஸ் ரெடி. இந்த முறையில் கசப்பு அதிகமாக தெரியாது ஒரு தேக்கரண்டி புளித்தண்ணீர் சேர்த்து பிசைந்தால் கசப்பு தெரியாது. சுவையும் நன்றாக இருக்கும்.
More News >>