தமிழகத்தில் மினி பேருந்துகள் திடீர் நிறுத்தம் பொதுமக்கள் அவதி!

தமிழகத்தில் சென்னை தவிா்த்து பிற மாவட்டங்களில் தனியாா் பேருந்துகளின் சேவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடா் உயா்வை சந்தித்து வரும் நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தனியாா் நிறுவனங்களுக்கு சொந்தமான மினி பேருந்துகளின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயா்வு வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறது. பெட்ரோல் டீசல் விலை உயா்வால் பொதுமக்கள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றனா். மேலும் சரக்கு வாகனங்களின் சேவை கட்டணமும் 25 சதவீதம் அளவில் உயா்த்தப்பட்டுள்ளது.

டீசல் விலை உயா்வால் சுமாா் 1200 தனியாா் மினி பேருந்துகளின் சேவை முன் அறிவிப்பின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை உயா்வால் போதிய லாபம் இன்றி பேருந்தை இயக்க முடியாது என்று பேருந்து உரிமையாளா்கள் தொிவித்துள்ளனா். பொதுமக்களின் நலலை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

More News >>