அசாம் மாநில தூதராக இளம் ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமாதாஸ் நியமனம்

அசாம் மாநில தூதராக அர்ஜூனா விருது பெற்ற இளம் ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமாதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இளம் ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ், உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இதேபோல், ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள்400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றார்.

இந்தியாவிற்கு பெருமையை வாங்கித்தந்த ஹிமா தாசுக்கு சமீபத்தில் அர்ஜூனா விருதை மத்திய அரசு வழங்கியது.

இதையடுத்து, ஹிமா தாசை அசாம் மாநில தூதராக நியமிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் சர்பானாந்த் சோனாவால் அறிவித்துள்ளார்.

More News >>