சைவத்துக்கு மாறிய தமன்னா! காரணம் யார் தெரியுமா?
நடிகை தமன்னா அசைவ உணவுகளை சாப்பிடுவதை விட்டுவிட்டு சைவ உணவுகளுக்கு மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது இந்த அதிரடி மாற்றத்துக்கு யார் காரணம் தெரியுமா?
அசைவ பிரியரான தமன்னா, இனி அசைவ உணவையே சாப்பிடப் போவதில்லை என தீடீர் முடிவை அறிவித்துள்ளார். இதற்கு காரணம் அவரது செல்ல வளர்ப்பு நாய்க்குட்டி ’பெபள்ஸ்’ தான்.
பெபள்ஸுக்கு சமீபத்தில் பக்கவாதம் ஏற்பட்டு கடுமையான பாதிப்படைந்துள்ளதால், அது சீக்கிரம் குணமடைய வேண்டி, அசைவ உணவுகளை இனி சாப்பிடப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக தமன்னா தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என கலக்கி வந்த தமன்னாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சீக்கிரம் அதற்கும் ஒரு வேண்டுதலை போடுங்க தமன்னா..