கவர்ச்சி ஆடை விமர்சனம் நடுவிரலை காட்டிய சமந்தா!
திருமணத்திற்கு பிறகும் அரைகுறை ஆடை அணியலாமா சமந்தா? என இணையத்தில் விமர்சித்தவருக்கு, நான் அப்படித்தான்.. அது என் இஷ்டம் என்ற சமந்தா, அவருக்கு நடுவிரல் காட்டும் புகைப்படத்தை பதிலாக அளித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் ஹீரோயின்கள் சினிமாவை விட்டு விலகி விடுவர். சிலர், குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்குவர். ஆனால், சென்னைப் பொண்ணு சமந்தா, டோலிவுட் நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்த பின்னரும், பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனது கணவர் நாகசைத்தன்யாவுடன் வெளிநாடு ஒன்றுக்கு சுற்றுலா சென்ற சமந்தா, அங்கு மிகவும் கவர்ச்சியான உடையை அணிந்து புகைப்படம் எடுத்துள்ளார். தனது புகைப்படங்களை இன்ஸ்டா கிராமில் சமந்தா பதிவிட, அதற்கு சில ரசிகர்கள் மோசமான கமெண்டுகளையும், திருமணத்திற்கு பின்னரும் இப்படி அரைகுறை ஆடை அணியலாமா என்றும் கேள்வி எழுப்பினர்.
மேலும் ஒரு நபர், ”நீங்கள் இந்த உடையில் சைத்தன்யாவின் மனைவி போல் தெரியவில்லை; வேறுமாதிரி இருக்கிறீர்கள் எனக் கூறினார். இதனால், கோபமடைந்த சமந்தா, நான் இப்படித்தான் டிரெஸ் போடுவேன். அது என் இஷ்டம் என பதில் அளித்ததும் இல்லாமல், நடுவிரல் புகைப்படத்தையும் அனுப்பி அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.