மீண்டும் ரெய்டு - அதிர்ச்சியில் சசிகலா உறவினர்கள்
சசிகலா உறவினர் வீடு, அலுவலகங்களில் இரண்டாவது முறையாக வருமான வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் வருமானவரி அதிகாரிகள் சசிகலா டிடிவி தினகரன் உறவினர், ஆதரவாளர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 187 இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், இன்று மீண்டும் அடையாறு கற்பகம் கார்டனில் உள்ள இளவரசி மருமகன் கார்த்திகேயன் வீடு, மிடாஸ், சாய் காட்டன்ஸ் உள்ளிட்ட குழுமங்களுக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் கோவை – பொள்ளாச்சி சாலையில் உள்ள எஸ்.வி.எஸ் கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், சசிகலாவின் உறவினர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.