5 கோடி பேஸ்புக் கணக்குகள் ஹேக்-அதிர்ச்சி தகவல்!
பில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட பேஸ்புக் நிறுவனம் 5 கோடி பயனர்களின் கணக்குகளை கையாளக்கூடிய டிஜிட்டல் லாகின் கோட்களை ஹேக்கர்கள் திருடிவிட்டதாக அந்நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.
இது பேஸ்புக்கின் மிக மோசமான பாதுகாப்பு அம்ச பாதிப்பாக கருதப்படுகிறது. இதற்கிடையில் தங்கள் பயனர்களின் கணக்குகள் தவறாக பயன்படுத்தப்பட்டதா அல்லது தகவல்கள் திருடப்பட்டதாக என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஹேக் செய்தவர்களின் இடம் எந்தக் குழுவினர் குறித்துக் கண்டறிய முடியவில்லை.
தொடக்க நிலை தகவல்களின் படி மிகப்பெரிய அளவில் ஹேக் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸுக்கர்பெர்க் ஹேக் விவகாரம் மிகவும் மோசமான ஒன்று. தலைமைச் செயல் அதிகாரி ஷெர்ல் சாண்ட்பெர்க் பேஸ்புக் கணக்குடன் தனது கணக்கும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன் காரணமாக பேஸ்புக்கின் பங்குகள் 2.6% சரிவைச் சந்தித்துள்ளன. நடப்பாண்டின் தொடக்கத்தில் அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா பேஸ்புக்கின் 87 மில்லியன் பயனர்களின் தகவல்களை முறைகேடாகப் பயன்படுத்தியது தலைப்புச் செய்தியானது. இதனால் உலகம் முழுவதும் பேஸ்புக் நிறுவனத்தின் பிரைவசி குறித்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும் #deleteFacebook என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் முழக்கங்களும் பரவி வருகின்றன. பேஸ்புக் ஹேக் சம்பவம் குறித்து அமெரிக்கா கூறுகையில், தகவல் பாதுகாப்பிற்கான சட்டங்களை வலுப்படுத்துவது அவசியமாகிறது என்றது.