பாகிஸ்தானுக்கு எதிராக மிகப் பெரிய தாக்குதல்- ராஜ்நாத் சிங்

பாகிஸ்தானுக்கு எதிராக மிகப் பெரிய தாக்குதல் இந்திய ராணுவம் நடத்திய இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீது, கடந்த செப்டம்பர் 18, 2016ல் நடத்தப்பட்ட தாக்குதலில் 17 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதே ஆண்டு, செப்டம்பர் 29ஆம் தேதி பாகிஸ்தான் இலக்குகளை குறிவைத்து, இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பல பயங்கரவாதிகள் இறந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்தது.

சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலின் 2ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் "இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதற்கு எதிராக ஏதோ ஒன்று நடந்துள்ளது. அதைப் பற்றி இப்போது சொல்ல மாட்டேன். ஆனால், 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பாக நம்ப முடியாத மிகப்பெரிய அதிரடி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதுகுறித்து விரைவில் அறிந்து கொள்வீர்கள்" எனக் கூறியுள்ளார்.

More News >>