+2வில் 80%ம் வெளிநாட்டு மருத்துவகல்லூரியில் சேர தகுதிசான்று..!
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 80 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதிச் சான்று வழங்க கூடாது என்று உத்தரவு அளிதுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 80 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதிச் சான்று வழங்க கூடாது என்று மத்திய அரசுக்கும், இந்தியமருத்துவ கவுன்சிலுக்கும் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பான வழக்கில் விசாரித்த உயர்நீதிமன்றம் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர தேவையான தகுதிகள் குறித்து விளக்கம் அளித்த இந்திய மருத்துவக் கவுன்சில், நீட் தேர்வில் தேர்ச்சி மற்றும் பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியியல் ஆகிய பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என அறிவித்தது.
மேலும் இந்தியாவில் தேர்வில் 90 சதவீத மதிப்பெண்கள்பெற்ற மாணவரால் மருத்துவ படிப்பில் சேர முடியாத, இந்தநிலையில் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதி மதிப்பெண்களை 80 சதவீதமாக நிர்ணயிக்க நீதிபதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.