சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி தீர்ப்பு: கேரளாவில் நாளை சிவசேனா பந்த்

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா நாளை கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. இதற்கு, சிவசேனா அழைப்பும் விடுத்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில், பெண்கள் உள்ளே செல்வதற்கு காலங்காலமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆண்களுக்கு பெண்களும் சமமாக உள்ள இந்த காலத்தில், சபரிமலை ஐயப்பன் கோவிலிற்குள் செல்வதற்கு பெண்களுக்கு மட்டும் எதற்கு தடை என்று இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் செல்வதற்கு அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, ஒரு பக்கம் வரவேற்பும், ஒரு பக்கம் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.

இந்நிலையில், தீர்ப்பை எதிர்த்து நாளை கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக சிவசேனா அறிவித்துள்ளது.

இதுகுறித்து, கேரள சிவசேனா அமைப்பின் தலைவர் புவனசந்திரன் கூறுகையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாவதற்கு முன்பே சபரிமலையில் ஆச்சார விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இவை பாதுகாக்க வேண்டும்.எனவே உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து நாளை கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த சிவசேனா தீர்மானித்துள்ளது என்றார்.

More News >>