அமெரிக்காவில் 9000 இந்தியர்கள் அதிரடி கைது

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய சுமார் 9 ஆயிரம் இந்தியர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டினர் பலர் சட்ட விரோதமாக மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்து குடியேறுகின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் டிரம்ப் அரசு ஈடுபட்டது.

அதன்படி, மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அமெரிக்கா திட்டமிட்டது. மேலும், சுங்க இலாகா மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினர் விழிப்புடன் கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், வெளிநாட்டினர் சட்ட விரோதமாக மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் நுழைந்து வந்த வண்ணம் உள்ளனர்.

மெக்சிகோ, கவுதமலா, ஹோண்டுராஸ், எல்சால்வேடர் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக நுழைவதாகவும், இவர்களை தொடர்ந்து இந்தியர்கள் அதிகளவில் நுழைவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்கள், அடைக்கலம் தரும்படி கோரிக்கை மனு தாக்கல் செய்கின்றனர். ஆனால் இதில், கடந்த 2012ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை அடைக்கலம் கேட்ட 42 சதவீத இந்தியர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதே நேரத்தில் 79 சதவீதம் எல்சால்வேடர் நாட்டினரினம் மனுவும், 78 சதவீதம் ஹோண்டுராஸ் நாட்டினரினம் மனுவுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டில் மட்டும் சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த சுமார் 9 ஆயிரம் இந்தியர்களை கைது செய்யப்பட்டுள்ளனநர். இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்.

கடந்த ஆண்டில் மட்டும் 3162 பேர் கைதாகினர். இந்த ஆண்டு இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>