கர்நாடகாவில் தொடரும் அவலம்: 5 ஆண்டுகளில் 3000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை
பெங்களூரு: வறட்சி மற்றும் விளைச்சல் இல்லாத காரணத்தால் கர்நாடகாவில் கடந்த ஐந்தாண்டுகளில் 3,515 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக அம்மாநில வேளாண்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில், மழை பொய்த்து போவதால், ஏற்பட்ட வறட்சி, விளைச்சல் இல்லாமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல மாநிலங்களில் விவசாயகிள் தற்கொலை செய்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கடன் தொல்லையால் தற்கொலை செய்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.இதுகுறித்து, கர்நாடக மாநில வேளாண் துறை இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், 3,515 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அவர்களில், 2,525 பேர் மட்டுமே வறட்சி காரணமாக விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் தற்கொலை செய்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பின்படி, 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 2,514 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதில், 1929 வழக்குகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
2017ஏப்ரலில் இருந்து நவம்பர் வரை மாநிலத்தில் குறைவான மழைப்பொழிவு இருந்தது. அதனால், ஏற்பட்ட வறட்சியால் 624 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கரும்பு விவசாயிகளே அதிக அளவில் இறந்துள்ளனர். மேலும், பருத்தி மற்றும் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர்.தற்கொலை செய்தவர்களில் 30 முதல் 40 சதவீதம் பேர் விவசாயம் செய்ய கடன் வாங்கியுள்ளனர். கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தற்கொலை செய்துள்ளனர்.
இததொடர்ப்க, 1332 கந்து வ்ட்டிக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில், 585 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இறந்தவர்களின் குடும்பத்திற்கு 1 முதல் 5 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் சித்தராமையா 2015ம் ஆண்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்ட தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.