சர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் ரிலீஸ்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளி அன்று ரிலீஸ் ஆக இருக்கும் சர்க்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் சற்று நேரம் முன்பு ரிலீஸ் செய்யப்பட்டது.
இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள சர்கார் படத்தின் சிங்கிள் ட்ராக் பாடலான சிம்ட்டாக்காரன் கடந்த சில நாட்கள் முன்பு ரிலீஸ் ஆகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகின்றது.
இந்நிலையில் சர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் பாடல் இன்று மாலை வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் தெரிவித்து இருந்தது.
தற்போது இரண்டாவது பாடலான "ஒருவிரல் புரட்சி" என்ற சர்கார் படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. நேற்று சர்கார் படத்தின் மற்றுமொரு போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள சர்கார் படத்தின் இரண்டாவது பாடல் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மேலும் படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் 2ம் தேதி மிக பிரமாண்டமாக சென்னையில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.