தஞ்சை அரண்மனையில் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் ஆய்வு

சென்னையில் கைது செய்யப்பட ரன்வீர்ஷாவுக்குச் சொந்தமான அரண்மனை தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ளது அங்கு சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருவையாறில் உள்ல ஹொசுரா அரண்மணை மராட்டிய மன்னரான சரபோஜி மன்னர் காலத்தில் வரி வசூல் செய்ய பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இங்குதான் கடந்த நான்கு ஆண்டுகளாக பிரகதி பவுண்டேசன் சார்பில் திருவையாறு புனித இசை திருவிழா நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியை ஆண்டுதோறும் ரன்வீர்ஷா தான் நடத்தி வருகிறார்.

பல கோடி ரூபாய் மதிப்பிலான பத்து ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த அரண்மணையை ரன்வீர்ஷா வெறும் 60 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த அரண்மனையில் பூட்டிக்கிடக்கும் பல அறைகளில் விலை மதிப்புமிக்க பல பொருட்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அரண்மணைக்கு அடிக்கடி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாக கூறப்படும் நிலையில் சிலைகள் கடத்தல் தொடர்பாக பேரம் பேசப்பட்டு இருக்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் இந்த அரண்மனையை ஆய்வு செய்தால் ஏராளமான சிலைகளை மீட்கலாம் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அங்கு ஆய்வு செய்தனர். சுமார் அரை மணி நேரம் மட்டுமே ஆய்வு செய்த அதிகாரிகள், அங்கு பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் இருக்கும் கவிதா என்ற பெண்ணிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 

More News >>