இன்றைய (01.10.2018) ராசிப்பலன்

இன்றைய ராசிப்பலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள்.

மேஷம்: மேஷ ராசி அன்பர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். கணவன் மனைவி உறவு, அன்பும் அரவணைப்பும் கலந்து காணப்படும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

ரிஷபம்: ரிஷப ராசி அன்பர்களே, தெய்வ அனுகூலம் எப்போதும் போல் உண்டு. பெற்றோர்கள் வகையில் ஒரு சில செலவுகள் வரும். நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு செய்வர். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்

மிதுனம்: மிதுன ராசி அன்பர்களே, எதையும் வெளிப்படையாக பேச வேண்டாம். பயணங்கள் எதிர்பார்த்தபடி அமையும். மனைவி மூலம் எதிர்பாராத பணவரவு உண்டு. உத்யோகத்தில் அதிக நன்மை கிடைக்கும். 

கடகம்: கடக ராசி அன்பர்களே, எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி வரும். குடும்ப விஷயங்களில் மற்றவர்கள் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் பணிச்ச்சுமை பாதியாக குறையும்.  

சிம்மம்: சிம்ம ராசி அன்பர்களே, குடும்பத்தில் செலவுகள் குறையும். எதையும் தாங்கும் மனவலிமையை வளர்த்து கொள்வீர்கள். ஆன்மீக விஷயங்களுக்காக பணம் நிறைய செலவாகும். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்சனைகள் ஏற்படும்.

கன்னி: கன்னி ராசி அன்பர்களே, குடும்பத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். தூரத்து உறவினர்கள் வகையில் சகாயம் கிடைக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். 

துலாம்: துலாம் ராசி அன்பர்களே, பண வரவு கூடும். உறவினர்கள் புரிந்துகொள்ளவில்லையே என ஆதங்கம் ஏற்படும். மனதில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தொழில், வியாபாரத்தில் அதிரடியான மாற்றங்கள் வரும்.   

விருச்சிகம்: விருச்சிக ராசி அன்பர்களே, குடும்பத்தில் விட்டு கொடுத்து போகவும். புது வாகனம் வாங்கும் எண்ணம் வரும். பல நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்க நேரிடும். தொழில், வியாபாரத்தில் இழந்ததை திரும்ப பெற முடியும். 

தனுசு:  தனுசு ராசி அன்பர்களே, எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வெளியிடத்தில் கடன் வாங்கி செலவு செய்ய வேண்டி வரும். உறவினர்களின் வகையில் மனக்கசப்பு வரலாம். உத்யோகத்தில் உங்கள் கோரிக்கை நிறைவேறும். 

மகரம்: மகர ராசி அன்பர்களே, குடும்ப பெரியோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். உங்கள் செல்வாக்கு வெகுவாக உயரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கிய நிற்கும்.

கும்பம்:  கும்ப ராசி அன்பர்களே, திருமண முயற்சி சாதகமான பலனை தரும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிக்க முடியும். புதிய தொழிலில் நல்ல அனுபவத்தை பெற முடியும். 

மீனம்: மீன ராசி அன்பர்களே, முக்கிய நபர்களின் சந்திப்பால் மன மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவி ஒன்றாக சேர்ந்து சுற்றுலா செல்ல வேண்டிவரும். பண புழக்கம் கணிசமாக உயர தொடங்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

More News >>