மத்திய அரசு உத்தரவால் செல்வாக்கு இழக்கும் மருத்துவர்கள்

நோயாளிகளுக்கு ஜெனரிக் மருந்துகளை மட்டுமே மருத்துவர்கள் எழுத வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நோயாளிகளுக்கு என்ன மருந்து கொடுக்க வேண்டுமென்பதை இனிமேல் இருந்து கடைக்காரர்தான் தீர்மானிப்பார்.

மாத்திரைகள் பல்வேறு மருந்துகள் கலந்த கலவை. மருந்துகள்தான் நோயை குணப்படுத்த செயலாற்றுகின்றன. இந்த மருந்துகள்தான் ஜெனரிக் மருந்துகள். ஜெனரிக் மருந்துகள் அடங்கிய மாத்திரைகளை நிறுவனங்கள் பிராண்ட் பெயர் ஏற்படுத்தி விற்கின்றன. பாரசிடமால் ஜெனரிக் மருந்து என்றால், இதைக் கொண்டு தயாரிக்கப்படும் குரோசின், மெடாசின் போன்றவை மாத்திரைகள். இவை இந்த பிராண்ட் பெயரில் விற்கப்படுகின்றன.

சில சமயங்களில் ஜெனரிக் பெயர்களையும் மாத்திரைகளுக்கு நிறுவனங்கள் வைப்பது உண்டு. ஜெனரிக் மருந்துகளை விட பிராண்ட் மருந்துகளின் விலை அதிகம். இதனால், இனி மருத்துவர்கள் நேயாளிகளுக்கு ஜெனரிக் மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும். மருந்து கடைக்காரர்தான், அந்த ஜெனரிக் மருந்துகளில் இருந்து தயாரிக்கப்படும் மாத்திரைகளை வழங்குவார். அதன்படி,நோயாளிகள் விலை குறைந்த மாத்திரைகளை வாங்கிக் கொள்ள முடியும். மேலும் இனிமேல் மருந்து விற்பனை பிரதிநிதிகள் டாக்டரிடம் காத்து கிடக்க வேண்டிய அவசியம் இருக்கப் போவதில்லை. மாறாக மருந்துக் கடைகளில் போய் தங்கள் மருந்துகள் பற்றி அறிமுகப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு நியூரோபின் 40 என்ற மாத்திரையை உதாரணமாக எடுத்துக் கொண்டால், அதில் 6 ஜெனரிக் மருந்துகள் கலந்திருக்கின்றன. இனி, இந்த ஒரு மாத்திரையை மருத்துவர் பரிந்துரைக்க வேண்டும் என்றால், 6 மருந்துகளின் பெயரை அவர் எழுத வேண்டும். அதேவேளையிர்ல மருத்துவர் தான் பரிந்துரைக்கும் ஜெனரிக் பெயர்களுடன், பிராண்ட் பெயரையும் குறிப்பிடலாம். நோயாளி, மருந்துக் கடையில் டாக்டர் குறிப்பிட்ட பிராண்ட் பெயர் கொண்ட மருந்தை வாங்க முடியவில்லை என்றார் விலை குறைந்த மற்றொரு மருந்தை வாங்கிக் கொள்ள முடியும். ஆனால், இது நடைமுறையில் எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.

 

More News >>