நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான பெருநகரமாக சென்னைக்கு முதலிடம்

புதுடெல்லி: நாட்டின் 6 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் சென்னையில் குறைவாகவே பதிவாகி உள்ளதாக குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. இதனால், பெண்களுக்கு பாதுகாப்பான பெருநகரமாக சென்னை முதலிடம் பிடித்து சாதனையுடன் பெருமைப்படுத்தி உள்ளது.

இந்தியாவில், டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட ஆறு பெருநகரங்கள் உள்ளன. இங்கு, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் பதிவாகி உள்ள புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளத. இந்த பட்டியலில் தலைநகர் டெல்லியில் தான் பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடந்துள்ளன.

டெல்லியில், 75.8 லட்சம் பெண்கள் வசிக்கின்றனர். இதில், பெண்களுக்கு எதிராக 13,808 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. அதாவது, ஒரு லட்சம் பெண்களில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புள்ளிவிவரத்தில் கடைசி இடத்தில் சென்னை இருக்கிறது.

சென்னையில், மெத்தம் 43 லட்சம் பெண்கள் உள்ளனர். இவர்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் 544 வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன. அதாவது, ஒரு லட்சம் பெண்களில் 12 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த புள்ளிவிரங்களில் அடிப்படையில், பெண்களுக்கு பாதுகாப்பான பெருநகரமாக சென்னை முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>