இடிச்சபுளியான முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!
விக்கிப்பீடியாவில் எடப்பாடி பெயர் 'இடிச்சபுளி' என மாற்றம், தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் எடப்பாடி பெயர் 'இடிச்சபுளி' என மாற்றப்பட்டுள்ளது.
நடந்து முடித்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக நின்று டிடிவி தினகரன் அபார வெற்றிபெற்றார். இடைத்தேர்தல் முடிவிற்கு பின்னர் பின் டி.டி.வி தினகரன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை 'இடிச்சபுளி' என்று கிண்டல் செய்தார்.
இந்நிலையில் திடீரென தகவல் களஞ்சியமான விக்கிபீடியாவில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் ஆங்கிலத்தில் ‘'இடிச்சபுளி' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது கண்டு அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
தற்போது அது சரிசெய்யப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி என்ற பெயர் சரிசெய்யப்பட்டது. முதல்வர் பெயரை மாற்றியதன் பின்னணியில் டி.டி.வி ஆதரவாளர்கள் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.