சென்னையில் வீடு கட்டனுமா இதை தெரிஞ்சி வைச்சிகோங்க?

சென்னை போன்ற நகரங்களில் வீடுகளுக்கு அனுமதிக்கப்படும் தளப் பரப்பளவுக் குறியீடு அதிகரிக்கப்பட்டு இன்று முதல் அமலாகிறது.

சென்னையில் வீடு அல்லது அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கு எப்ஐஎஸ் (FSI) எனப்படும் தளப் பரப்பளவுக் குறியீடு என்ற கட்டுமான ஒழுங்கு விதிமுறை பின்பற்றப்படுகிறது. சிறப்பு கட்டடங்கள் எனும் 4 மாடிகளுக்கு மிகாத கட்டிடங்களுக்கு இந்த தளப் பரப்பளவுக் குறியீடு 1.5 மடங்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மனையின் பரப்பை விட ஒன்றரை மடங்கு பரப்பளவுக்கு கட்டிடங்களை அந்த மனையில் கட்டலாம்.

 

1000 சதுர அடி மனை என்றால் அதில் 1500 சதுர அடிக்கு மிகாமல் கட்டிடங்களைக் கட்டலாம். இந்த தளப் பரப்பளவுக் குறியீடு போதாது என்றும் கட்டுமானச் செலவு குறைவதற்கு இக்குறியீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

இதன் எதிரொலியாக, அனைத்து தரப்பினருக்கும் இலவசமாக அனுமதிக்கப்படும் தள பரப்பளவு குறியீட்டை 1.5 என்பதிலிருந்து 2 என உயர்த்துவதாகவும் புதிய மாற்றம் இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசியபோது, இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்

More News >>