உள்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை

 

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு வங்ககடலில் இருந்து தெற்கு மத்திய மகாராஷ்டிரா வரை உள் தமிழகம் மற்றும் உள் கர்நாடகா வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 5 செ.மீ மழையும் , திருப்பூர் மாவட்டம் அவினாசி, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுக்கொண்டபுரம், கோவை மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் தலா 4 செமீ மழையும் பதிவாகியுள்ளது

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More News >>