மீண்டும் வருகிறது தேவியின் ஆட்டம்மொரிசீயஸில் படப்பிடிப்பு
ஏ.எல். விஜய் இயக்கத்தில், பிரபுதேவா, தமன்னா நடிப்பில் வெளியான ‘தேவி’ படத்தின் இரண்டாம் பாகம் துவங்கிவிட்டது. மொரிசீயஸில் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளதாகவும், பிரபுதேவா, தமன்னா மொரிசீயஸ் தீவில் முகாமிட்டுள்ளதாகவும் புகைப்படங்களுடன் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதராசபட்டினம், தெய்வமகள், தாண்டவம், தலைவா படங்களை இயக்கிய ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஹாரர் ஹானரில் வெளியான தேவி படம் பிரபுதேவா மற்றும் தமன்னாவுக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் தேவி படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியானது.
தற்போது, மீண்டும் ‘தேவி’ மேஜிக்கை ரீ-க்ரியேட் செய்ய இயக்குநர் ஏ.எல் விஜய் முயன்று வருகிறார். ‘தேவி-2’ படத்தை எடுக்கும் பணியை துவங்கி விட்டார் ஏ.எல். விஜய்.
இரண்டாம் பாகத்திலும், பிரபுதேவா, தமன்னாவே நடிக்கின்றனர். வேறு நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மொரிசீயஸில் நடைபெற்று வருகிறது. தமன்னா மற்றும் பிரபுதேவா மொரிசீயஸ் தீவில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மீண்டும் தேவி பேய் மிரட்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!