ஸ்டார் ஆகணுமா?விஜய் டிவி சீரியலில் நடிக்க ஒரு அரிய வாய்ப்பு!
ஒரு தனியார் தொலைக்காட்சியில் வேலைக்கு சென்றால், அங்கிருந்து வெளிவரவே முடியாது என்ற கருத்துக்களை விஜய் டிவி பல முறை உடைத்தெறிந்துள்ளது.
விஜய் டிவியில் முகம் காட்டிய பலபேர் இன்று தமிழ் சினிமாவின் முகவரிகளாக மாறியுள்ளனர். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், சந்தானம், ஜீவா, சிவகார்த்திகேயன், மா.கா.பா. ஆனந்த், கோபிநாத், திவ்ய தர்ஷினி, செந்தில், ப்ரியா பவானி ஷங்கர், ரோபோ சங்கர் மற்றும் பல சூப்பர் சிங்கர் பாடகர்கள் என இந்த பட்டியல் மீக நீளமானது.
மீண்டும் இந்த வாய்ப்பு.. பொதுமக்களுக்கு கிடைக்க உள்ளது. விஜய் தொலைக்காட்சியின் புதிய தொடரில் நடிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு, ஒரு ஆடிஷனை நடத்துகிறது விஜய் டிவி.
அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தங்களது டுவிட்டர் தளத்தில் தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
விஜய் டிவியில் முகம் காட்டினால் சூப்பர்ஸ்டார் ஆகிவிட முடியாது. நிச்சயம் உங்களுக்குள் தனித்திறமை மற்றும் விடாமுயற்சி இருந்தால், நீங்களும் தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறலாம்!
உங்களது புகைப்படம், விபரங்கள், முகவரி மற்றும் நீங்கள் நடித்த வீடியோ பதிவுகளை vijaytvserialaudition@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பங்கள்.. வெற்றி பெறும் சாமனியர்களுக்கு எங்களது வாழ்த்துகள்!