பிறந்த நாள் கொண்டாடிய இந்திய நாட்டின் 14வது குடியரசு தலைவர்.
1 அக்டோபர்1945 ல் பிறந்த குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந் நாட்டின் 14வது குடியரசு தலைவர் இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடினார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி டிவிட்டரில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குடியரசுத் தலைவரின் அறிவுக்கூர்மை மற்றும் தொலைநோக்குப் பார்வையால் இந்தியா பலனடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். சமூகத்தில் ஒவ்வொரு பிரிவு மக்களுடனும் அவர் சிறப்பான தொடர்பில் இருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்துடன் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து நாட்டு மக்களுக்கு சேவையாற்ற பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.