சரவெடியாய் தெறிக்கும் சர்க்கார் டிராக் லிஸ்ட் இதோ!
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள விஜய்யின் ‘சர்க்கார்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நாளை சென்னையில், கோலாகலமாக நடைபெறுகிறது. இந்நிலையில், சர்க்கார் படத்தின் டிராக் லிஸ்டை சன்பிக்சர்ஸ் வெளியிட்டு விஜய் ரசிகர்களின் தூக்கத்தை களவாடியுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் – விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் சர்க்கார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், வில்லியாக வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கின்றனர். படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். மெர்சலை தொடர்ந்து அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.
முன்னதாக படத்தின் இரண்டு சிங்கிள்கள் ரிலீசாகி வைரல் ஹிட்டடித்துள்ளன. ‘சிம்டாங்காரன்’ பாடல் கடும் விமர்சனத்துக்கு நடுவிலும், பட்டித் தொட்டிகளில் உள்ள குட்டிகளையும் ஆட்டம் போட வைத்துள்ளான்.
அடுத்த பாடலான ‘ஒரு விரல் புரட்சிக்கு’ தனியாக விளக்கம் கூறவேண்டிய அவசியம் ஏ.ஆர். ரஹ்மானுக்கும், விவேக்குக்கும் ஏற்படவில்லை. ஏனென்றால், அஜித் ரசிகர்களே பாடலை புகழ்ந்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது, சர்க்கார் படத்தின் அனைத்து பாடல்கள் குறித்த தகவல் அடங்கிய டிராக் லிஸ்டை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
சிம்டாங்காரன், ஒரு விரல் புரட்சியை தொடர்ந்து, டாப் டக்கரு, OMG பொண்ணு, CEO இன் தி ஹவுஸ் என பாடல்கள் லிஸ்ட் சரவெடியாய் உள்ளன