இன்றைய ( 02.10.2018 ) ராசிபலன்கள்.
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள்.
மேஷம்: மேஷ ராசி நேயர்களே, சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்ய முடியும். கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேற ஆரம்பிக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.
ரிஷபம்: ரிஷப ராசி அன்பர்களே, குடும்பத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அனுபவ அறிவை கொண்டு பல காரியங்களை சாதிப்பீர்கள். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற முடியும். உத்யோகத்தில் செல்வாக்கு கூடும்.
மிதுனம்: மிதுன ராசி நேயர்களே, திருமணம் காரியம் கைகூடும். உற்றார், உறவினர்களிடம் ஏற்பட்ட விரிசல்கள் மறையும். உடன்பிறப்பு வகையில் உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு.
கடகம்: கடக ராசி நேயர்களே, குடும்ப ஒற்றுமை பலப்படும். மன உறுதியுடனும் செயல்பட்டால் காரியங்களில் வெற்றி உறுதி. பூர்விக சொத்து பிரச்சனை முடிவுக்கு வரும். தொழில், வியாபாரத்தில் புது திட்டங்கள் நிறைவேறும்.
சிம்மம்: சிம்ம ராசி நேயர்களே, பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ளவும். நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவேறும். வாகன வசதி வாய்ப்புகள் பெருகும். தொழில், வியாபாரம் புதிய பாதையில் செல்லும்
கன்னி: கன்னி ராசி நேயர்களே, குடும்ப பாரம் குறையும். விலை உயர்ந்த பொருள் சேர்க்கை உண்டாகும். மனம் மகிழும் படியான செய்தி ஒன்று வரும். தொழில், வியாபாரத்தில் பெரிய மாற்றம் வரும்.
துலாம்: துலாம் ராசி நேயர்களே, நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். பயணங்கள் நல்ல ஒரு அனுபவத்தை தரும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பணிச்சுமை குறையும்.
விருச்சிகம்: விருச்சிக ராசி நேயர்களே, பணத்தேவைகள் இருந்தாலும் அதை எதிர்கொள்ள முடியும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். உடல் ஆரோக்கியம் சீராகும். கூட்டு தொழில், வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
தனுசு: தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்புகள் நீங்கும். உறவினர்கள் உங்கள் உதவியை நாடி வருவர். மனதில் தெம்பும், தைரியமும் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்
மகரம்: மகர ராசி நேயர்களே, இஷ்ட தெய்வ வழிபாடு மனநிம்மதியை தரும். தினசரி தேவைகள் அதிகமாகும். உறவினர்கள் வகையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். செய்தொழிலில் மேன்மை உண்டாகும்.
கும்பம்: கும்ப ராசி நேயர்களே, பெற்றோர்களின் சொல்லபடி கேட்டு நடக்கவும். நண்பர்கள் எப்போதும் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மீக பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியும்.
மீனம்: மீன ராசி நேயர்களே, எதையும் ஒளிவு மறைவின்றி பேச நினைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் நட்பு கிடைக்கும்.