இன்று காலை 11மணிக்கு 2.0 ஸ்னீக் பீக் ரிலீஸ்!
இந்தியாவிலேயே முதன்முறையாக 530 கோடிக்கும் மேல் பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஷங்கரின் 2.0 படம் உருவாகி வருகிறது. இன்று காலை 11 மணிக்கு 2.0 ஸ்னீக் பீக் வெளியாகும் என இயக்குநர் ஷங்கர் ட்வீட் செய்துள்ளார்.
லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் படம் 2.0. சூப்பர்ஸ்டார் ரஜினி, அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 2010ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஆன, எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 உருவாகி வருகிறது.
சிஜி கம்பெனிகள் இந்த படத்தை சொன்ன தேதிக்கு முடித்து தராமல் காலதாமதம் செய்தததால், படத்தின் பட்ஜெட்டும், ரிலீஸ் தேதியும் எகிறியது நாம் அறிந்த ஒன்றே. படம் இந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என ஷங்கர் மீண்டும் அறிவித்துள்ள நிலையில், படத்தின் பணிகள் இன்னமும் நிறைவடைந்ததா என்பது சந்தேகமான ஒன்றே?
டிரெய்லர் இன்னும் வெளியிடப்படாத நிலையில், படத்தின் பற்றிய பேச்சுகள் குறைந்துள்ளதால், படத்தில் உழைத்தவர்களின் கடும் உழைப்பு குறித்த சமாளிஃபிகேஷன்ஸ் ஸ்னீக் பீக்கை இன்று காலை 11 மணிக்கு படக்குழுவினர் வெளியிட உள்ளனர்.
சர்க்கார் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுவதால், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க படக்குழுவினர் முயற்சிப்பதாகவும், பேச்சு அடிபடுகின்றது.
சமீபத்தில் வெளியான 2.0 டீஸர் தமிழ்நாட்டில் பெரிய ரெக்கார்டுகளை க்ரியேட் செய்யவில்லை. பாலிவுட்டில், அதிகம் பேர் அக்ஷய் குமார் இதில், நடித்திருப்பதால், விரும்புவதாகவும் தெரிவித்து வருகின்றனர். படத்தின் பட்ஜெட்டையாவது ஷங்கரின் 2.0 மேஜிக் ஈட்டுமா என்பது சிட்டி பாணியில் சொல்லவேண்டும் என்றால் ஐபோதெட்டிக்கல் கேள்வியாகவே உள்ளது.